search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கங்கனா ரணாவத்"

    • கங்கனா, தற்போது மறைந்த பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் 'எமர்ஜென்சி' படத்தில் நடிக்கிறார்.
    • இப்படத்திற்காக தனது அனைத்து சொத்துகளையும் அடமானம் வைத்ததாக கங்கனா தெரிவித்துள்ளார்.

    தமிழில் 'தாம்தூம்', ஜெயலலிதா வாழ்க்கை கதையான 'தலைவி' படங்களில் நடித்து பிரபலமான கங்கனா ரணாவத், இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்துகள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி, இதனால் வழக்குகளையும் சந்திக்கிறார். சமீபகாலமாக பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவும் பேசி வரும் கங்கனா, தற்போது மறைந்த பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் 'எமர்ஜென்சி' படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அவரே இயக்குகிறார்.


    இந்திரா காந்தி - கங்கனா ரணாவத்

    இந்திரா காந்தி - கங்கனா ரணாவத்

    இந்திரா காந்தி ஆட்சியின் நெருக்கடி நிலை பிரகடனத்தை படத்தில் காட்சிப்படுத்த உள்ளனர். அவரை பற்றிய சர்ச்சை கருத்துகள் படத்தில் இடம்பெறலாம் என்ற பேச்சும் உள்ளது. கங்கனாவின் இந்திராகாந்தி தோற்றம் ஏற்கனவே வெளியாகி வைரலானது.

    இந்நிலையில் இப்படம் குறித்து கங்கனா ரணாவத் கூறும்போது, "எமர்ஜென்சி படப்பிடிப்பை முடித்து விட்டேன். எனது வாழ்க்கையின் பெருமையான தருணம் இது. ஆனாலும் படத்தை சுகமாக முடித்து விடவில்லை. படப்பிடிப்பை ஆரம்பித்தபோது எனக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதன்பிறகு படத்தை முடிக்க எனது அனைத்து சொத்துகளையும் அடமானம் வைத்தேன். இது எனக்கு மறுபிறவி மாதிரி. சொத்தை அடமானம் வைத்ததை வெளியே சொல்லவில்லை.


    கங்கனா ரணாவத்

    கங்கனா ரணாவத்

    முன்பே சொல்லி இருந்தால் சிலர் எனது நிலையை பார்த்து கவலைப்பட்டு இருப்பார்கள். ஆனால் நான் விழுவதை பார்க்க ஆசைப்படுபவர்களுக்கும், நான் கஷ்டப்பட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் எனது வலி மூலம் கிடைக்கும் சந்தோஷத்தை கொடுக்க நான் விரும்பவில்லை. நான் சொல்ல விரும்புவது உங்கள் கனவுகள் நிறைவேற கடினமாக உழையுங்கள். நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்பதை என்மீது அக்கறை கொண்டவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

    • கங்கனா, தற்போது மறைந்த பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் 'எமர்ஜென்சி' படத்தில் நடிக்கிறார்.
    • இப்படத்திற்காக நாடாளுமன்றத்தில் படபிடிப்பு நடத்த அனுமதி கேட்டு கங்கனா நாடாளுமன்ற செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    தமிழில் 'தாம்தூம்', ஜெயலலிதா வாழ்க்கை கதையான 'தலைவி' படங்களில் நடித்து பிரபலமான கங்கனா ரணாவத் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்துகள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி, இதனால் வழக்குகளையும் சந்திக்கிறார். சமீபகாலமாக பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவும் பேசி வரும் கங்கனா, தற்போது மறைந்த பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் 'எமர்ஜென்சி' படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அவரே இயக்குகிறார்.

     

    கங்கனா ரணாவத்

    கங்கனா ரணாவத்

    இந்திரா காந்தி ஆட்சியின் நெருக்கடி நிலை பிரகடனத்தை படத்தில் காட்சிப்படுத்த உள்ளனர். அவரை பற்றிய சர்ச்சை கருத்துகள் படத்தில் இடம்பெறலாம் என்ற பேச்சும் உள்ளது. கங்கனாவின் இந்திராகாந்தி தோற்றம் ஏற்கனவே வெளியாகி வைரலானது. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் 'எமர்ஜென்சி' படப்பிடிப்பை நடத்த கங்கனா ரணாவத் திட்டமிட்டு உள்ளார். இதற்கான அனுமதியை கேட்டு நாடாளுமன்ற செயலாளருக்கு கங்கனா கடிதம் எழுதி உள்ளார். நாடாளுமன்றத்தில் பொதுவாக படப்பிடிப்பு நடத்துவது இல்லை. கங்கனா அனுமதி கேட்டு இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • டுவிட்டர் செயலி கூடுதல் அம்சங்களுடன் 'டுவிட்டர் புளூ' என்ற பெயரில் மேம்படுத்தப்பட்டு பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது.
    • ஆதார் அட்டை வைத்திருக்கும் எல்லோருக்கும் 'டுவிட்டர் புளூ' வசதி அளிக்கப்பட வேண்டும் என்று கங்கனா குறிப்பிட்டுள்ளார்.

    டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனிடையே, டுவிட்டர் செயலி கூடுதல் அம்சங்களுடன் 'டுவிட்டர் புளூ' என்ற பெயரில் மேம்படுத்தப்பட்டு பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. மாதம் 8 டாலர்கள் கட்டணத்துடன் 'டுவிட்டர் புளூ' வசதி பயனாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. சிறப்பு அம்சங்களை கொண்ட 'டுவிட்டர் புளூ' வசதி தற்போது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் மட்டுமே நடைமுறையில் உள்ளது.

    கங்கனா ரணாவத்

    கங்கனா ரணாவத்

     

    இந்தியாவில் 'டுவிட்டர் புளூ' வசதி எப்போது அறிமுகப்படுத்தப்படும் என இந்திய பயனாளர்கள் டுவிட்டர் தலைவர் எலான் மஸ்க்கை டேக் செய்து டுவிட்டரில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க், 'ஒரு மாதத்திற்குள் இந்தியாவில் டுவிட்டர் புளூ வசதி அறிமுகமாகும் என தெரிவித்தார். விளம்பரம் இல்லாத கட்டுரைகள், டுவிட்டர் செயலியின் நிறம், 'தீம்களை' மாற்றும் வசதி, டுவிட் செய்யப்படும்போது சிறிது கால அவகாசம் எடுத்து பயனாளர்கள் பகிரும் கருத்தை உடனடியாக தடுத்து நிறுத்தும் வசதி, நீண்ட மற்றும் அதிக தரம் கொண்ட வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதிகளையும் 'டுவிட்டர் புளூ'வின் சிறப்பு அம்சங்களாக உள்ளன.

     

    கங்கனா ரணாவத் பதிவு

    கங்கனா ரணாவத் பதிவு

     இந்நிலையில், எலான் மஸ்க்கின் இந்த முடிவை நடிகை கங்கனா ரணாவத் ஆதரவளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ஆதார் அட்டை வைத்திருக்கும் எல்லோருக்கும் 'டுவிட்டர் புளூ' -வசதி அளிக்கப்பட வேண்டும். இப்போது இருக்கும் சிறந்த சமூக ஊடக தளமாக டுவிட்டர் திகழ்கிறது. இந்த உலகில் எதுவும் இலவசம் இல்லை. ஆகவே டுவிட்டர் கட்டணம் வசூலிப்பதில் தவறில்லை என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த ஆண்டு மே மாதம், டுவிட்டர் விதிகளை தொடர்ந்து மீறியதற்காக கங்கனாவின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பாலிவுட் நடிகை கங்கனா தற்போது எமர்ஜென்சி படத்தில் நடித்துள்ளார்.
    • இவர் அடுத்ததாக நாடக நடிகை பினோதினி வாழ்க்கை கதையில் நடிக்கவுள்ளார்.

    பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் சமீப காலமாக பயோபிக் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான `தலைவி', `மணிகர்ணிகா' போன்ற படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தைத் தழுவிய `எமர்ஜென்சி' எனும் படத்தில் நடித்துள்ளார்.


    கங்கனா ரணாவத் 

    இந்நிலையில் தற்போது பெங்காலி நாடகங்களில் நடித்து புகழ்பெற்ற நாடக நடிகையான பினோதினியின் வாழ்க்கை கதையில் கங்கனா ரணாவத் நடிக்கவுள்ளார். இந்த படத்தை பரிணிதா, மர்தாணி போன்ற படங்களை இயக்கிய பிரதீப் சர்க்கார் இயக்கவுள்ளார்.


    கங்கனா ரணாவத் 

    இந்த படம் தொடர்பாக நடிகை கங்கனா ரணாவத் கூறியதாவது, "நாடு போற்றும் பெருமை பெற்ற பினோதினி பயோபிக்கில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இயக்குனர் பிரதீப் சர்க்கார் படங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகை. அவருடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது" என்று கூறியுள்ளார்.

    • பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற கதாப்பாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார்.
    • அதன்பின்னர் விக்ரம் அடுத்து நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற கதாப்பாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார். பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து பா.இரஞ்சித் இயக்கும் 'சியான் 61' படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

     

    விக்ரம் - இயக்குனர் அலௌகிக் தேசாய்

    விக்ரம் - இயக்குனர் அலௌகிக் தேசாய்

    இந்நிலையில் விக்ரம் அடுத்து நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கங்கனா ரணாவத் நடிக்கும் சீதா (The Incarnation - Sita) படத்தில் விக்ரம் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. அலௌகிக் தேசாய் இயக்கும் இப்படத்திற்கு பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். 

    • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி.
    • நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், சல்மான் ருஷ்டி. இவர் கடந்த 20 ஆண்டாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். பிரபல எழுத்தாளராகிய இவர் எழுதிய, "சாத்தானின் வேதங்கள்' என்ற நூல், சர்வதேச அளவில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், இஸ்லாமுக்கு எதிரான விஷயங்கள் இடம் பெற்றிருப்பதாக கூறி அவருக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடந்தன.


    சல்மான் ருஷ்டி

    இதையடுத்து சல்மான் ருஷ்டி நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேடையில் விரிவுரை அளிக்க இருந்தபோது திடீரென எழுந்த மர்ம நபர் ஒருவர் சல்மான் ருஷ்டியை நோக்கிச் சென்று, கத்தியால் அவரது கழுத்து, வயிற்றுப் பகுதியில் குத்தினார். இதில் நிலைகுலைந்த சல்மான் ருஷ்டி தரையில் விழுந்தார். உடனே அவர் மருத்துவ ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    இந்த தாக்குதலில் அதிக ரத்தத்தை இழந்த சல்மான் ருஷ்டி செயற்கை சுவாசக் கருவியுடன் வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருகிறார். கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஒரு கண் பார்வையை ருஷ்டி இழக்க நேரிட்டுள்ளது என அவரது புத்தகத்தின் ஏஜெண்ட்டு தெரிவித்துள்ளார்.


    கங்கனா ரணாவத்

    இந்நிலையில் சல்மான் ருஷ்டி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நடிகை கங்கனா ரணாவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், "இன்னொரு நாள் ஜிஹாதிகளின் மற்றொரு பயங்கரமான செயல். "சாத்தானின் வேதங்கள்" அந்த காலத்தின் மிகச்சிறந்த புத்தகங்களில் ஒன்றாகும். நான் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு அதிர்ச்சியடைந்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    தாக்குதலைத் தொடர்ந்து சல்மான் ருஷ்டி வென்டிலேட்டரில் இருப்பதாகக் கூறிய செய்திக் கட்டுரையின் புகைப்படத்தையும்  தனது பதிவில் பகிர்ந்துள்ளார்.

    • தாகத் திரைப்படத்தைத் தொடர்ந்து கங்கனா ரணாவத் நடித்துள்ள படம் எமர்ஜென்சி.
    • எமர்ஜென்சி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் முதல் அண்மையில் வெளியானது.

    தாகத் திரைப்படத்தைத் தொடர்ந்து கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள படம் 'எமர்ஜென்சி'. இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மட்டும் மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார்.

    ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.


    கங்கனா ரணாவத்

    இந்நிலையில் கங்கனா ரணாவத்துக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை படக்குழு தனது சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் கங்கனா படப்பிடிப்பு தளத்தில் தன் பணிகளை மேற்கொள்ளும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது. கங்கனா ரணாவத் விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


    • தாம் தூம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் கங்கனா ரணாவத்.
    • 'அக்னிபாத்' திட்டம் ஆழமான அர்த்தம் கொண்டது என்று கங்கனா ரணாவத் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது. இதை திரும்ப பெறக்கோரி பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்து உள்ளது. அதேநேரம் இந்த திட்டம் கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடியை நடிகை கங்கனா ரணாவத் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், 'இஸ்ரேல் போன்ற பல நாடுகள் தங்கள் இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி கட்டாயமாக்கி இருக்கிறது.


    கங்கனா ரணாவத்

    கங்கனா ரணாவத்


    ஒழுக்கம், தேசியவாதம் போன்ற வாழ்க்கையின் மதிப்பீடுகளை கற்றுக்கொள்ளவும், நாட்டின் எல்லைகளை பாதுகாப்பது என்றால் என்ன என்பது குறித்து அறியவும் சில ஆண்டுகள் ஒவ்வொருவரும் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். அந்தவகையில் அக்னிபாத் திட்டமும், தொழில் வாழ்க்கையை கட்டமைப்பதை விட ஆழமான அர்த்தம் கொண்டது' என குறிப்பிட்டு உள்ளார். இவரின் இந்த கருத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.

    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.
    சர்ச்சை நடிகை என்றாலே ரசிகர்களுக்கு சட்டென நினைவுக்கு வருவது கங்கனா ரணாவத். இந்திய அரசு கங்கனாவுக்கு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது அளித்து கவுரவித்தது. இந்த நிலையில் தனக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக கங்கனா ரணாவத் அறிவித்துள்ளார். 

    கங்கனா

    வருகிற ஆண்டுகளில் நீங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்கள் என்று கங்கனா ரணாவத்திடம் கேட்டபோது, ‘‘விரைவில் நான் திருமணம் செய்துகொள்ள இருக்கிறேன். வர இருக்கும் ஆண்டுகளில் குழந்தைகள் பெற்று ஒரு தாயாக என்னை நான் பார்க்க ஆசைப்படுகிறேன்'' என்றார். உங்கள் வாழ்க்கையில் மனம் கவர்ந்த பிரத்தியேகமான ஆண் இருக்கிறாரா? என்று கேட்டபோது, ‘‘ஆம் இருக்கிறார். அவரைப் பற்றி விரைவில் அனைவருக்கும் தெரியவரும்'' என்றார். 
    கேன்ஸ் படவிழாவில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் காஞ்சீபுரம் பட்டு சேலை அணிந்து சென்று பலரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.
    சர்வதேச அளவில் ஆஸ்கார், குளோப் திரைப்பட விருதுகளுக்கு அடுத்து கேன்ஸ் விருதுகள் உயர்வாக கருதப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான 75-வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் உள்ள கேன்ஸ் நகரில் தொடங்கி உள்ளது. வருகிற 25-ந்தேதி வரை இந்த விழா நடக்கிறது. போட்டியில் சர்வதேச அளவில் 21 படங்கள் பங்கேற்கின்றன.

    சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. கேன்ஸ் பட விழாவில் அமெரிக்க இயக்குனர் ஜின் ஜார்முச் இயக்கிய ‘த டெட் டோன்ட் டை’, டாரண்டினோவின் ‘ஒன்ஸ் அப் ஆன் எ டைம் இன் ஹாலிவுட்’, முதன் முறையாக கருப்பின பெண் இயக்குனரான பிரான்சிஸ் மட்டி டியோப் இயக்கிய படம் ஆகியவற்றை திரையிடுவது முக்கியத்துவம் பெற்றுள்ளன.



    கேன்ஸ் விழாவில் விருது பெறும் பல படங்கள் ஆஸ்கார் விருதை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர் நடிகைகள் பலர் கலந்து கொள்கிறார்கள். இந்தி நடிகைகள் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, கங்கனா ரணாவத் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கங்கனா ரணாவத் காஞ்சீபுரம் பட்டு சேலை அணிந்து சென்று பலரையும் திரும்பி பார்க்க வைத்தார். இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    ×